ஈஸி சாக்கோ கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - முக்கால் கப் சர்க்கரை - அரை கப்பிற்கு சிறிது குறைவான அளவு சாக்கோ பவுடர் - 3 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி கல்கண்டு - ஒரு தேக்கரண்டி டெய்ரி மில்க் சாக்லெட் - 2 துண்டுகள் உடைத்த முந்திரி பருப்பு - ஒரு தேக்கரண்டி பால் - கால் கப் மொலின் சாக்கோ சிரப் - 2 துளிகள் செர்ரி - 10 (அலங்கரிக்க)
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் மைதா
சர்க்கரை
பேக்கிங் பவுடர்
பேக்கிங் சோடா
கல்கண்டு
டெய்ரி மில்க் சாக்லெட் துண்டுகள் மற்றும் சாக்கோ பவுடர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மைக்ரோவேவ் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதா மாவினை தூவி
மிக்ஸியிலுள்ள கலவையை அதில் ஊற்றவும்.
அத்துடன் பால்
முந்திரி பருப்பு மற்றும் மொலின் சாக்கோ சிரப் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பீட்டரால் அடிக்கவும். பிறகு அந்த பாத்திரத்தை மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். (மொலின் சிரப் இல்லையெனில் சாக்கோ எஸன்ஸ் சேர்த்து கொள்ளலாம்).
உடனே மைக்ரோவேவை திறக்காமல் 2 நிமிடங்கள் கழித்து திறந்து கேக்கை ஒரு தட்டிற்கு மாற்றவும்.
எளிதாகச் செய்யக்கூடிய சாக்கோ கேக் ரெடி. செர்ரி துண்டுகள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.