ஈஸி குக்கர் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப் சீனி - ஒன்றரை கப் வெண்ணெய் - ஒரு கப் முட்டை - 4 ரீஃபைண்ட் ஆயில் - அரை கப் பால் - அரை கப் வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா - முக்கால் தேக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சீனியை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்

ரீஃபைண்ட் ஆயில்

பொடித்த சர்க்கரை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.

மைதாவை சலித்து பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மாவு கலவையை முட்டை கலவையுடன் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

இதனுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்தால் கேக் மாவு ரெடி.

இந்த மாவு கலவையை வெண்ணெய் தடவிய குக்கர் பாத்திரத்தில் ஊற்றவும். (குக்கருடன் கொடுத்து இருப்பார்களே அந்த பாத்திரம்)

அந்த பாத்திரத்தை குக்கரினுள் வைத்து மூடி அடுப்பை சிம்மில் வைத்து 40-45 நிமிடங்கள் வேக விடவும். வெயிட்

கேஸ்கட் போட தேவை இல்லை. குக்கரில் தண்ணீர் ஊற்ற தேவை இல்லை. இடையில் வேண்டுமானால் திறந்து பார்த்து கொள்ளலாம் ஒன்றும் ஆகாது.

கேக்கை டூத் பிக் கொண்டு குத்தினால் ஒட்டாமல் வந்தால் சுவையான கேக் ரெடி.

இப்போது விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: