ஈசி குக்கர் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு-2கப்

சீனி-ஒன்னரை கப்

வெண்ணெய்-1கப்

முட்டை-4

ரிஃபண்ட் ஆயில்-அரைகப்

பால்-அரை கப்

வெண்ணிலா எசன்ஸ்-அரை ஸ்பூன்

பேகிங் சோடா-முக்கால் ஸ்பூன்

செய்முறை:

சீனியை மிக்சியில் பொடித்து கொள்ளவும்.மைதா மற்றும் பேகிங் பவுடரை சலித்து கொள்ளவும்.

வெண்ணெய்,ரிஃபண்ட் ஆயில்,பொடித்த சீனியை சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.அதனுடன் பேகிங் பவுடர் கலந்த மைதாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

நன்கு கலந்ததும் அதில் பால் மற்றும் எசன்சை விட்டு மீண்டும் நன்கு கலக்கவும்.இது தோசை மாவு பததில் இருக்கவேண்டும்.

அடி கனமான குக்கர் பாத்திரதில் நெய் தடவி அதில் கேக் மாவை ஊற்றி,குக்கரில் இந்த பாத்திரத்தை வைக்கவும்.(குக்கரில் தண்ணீர் ஊற்றவேண்டாம்.)

குக்கர் மூடிக்கு கேஸ் கட் போடாமல் குக்கரை மூடி 45 நிமிடம் சிம்மில் வைக்கவும்.சுவையான குக்கர் கேக் ரெடி

குறிப்புகள்:

இந்த கேக்கிற்க்கு வெண்ணெய் இல்லையென்றாலும் பரவாயில்லை.ரிஃபண்ட் ஆயில் முக்கால் டம்ளர் சேர்த்தும் செய்யலாம்.