ஆல்மண்ட் குக்கீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு (அல்லது) மல்டிக்ரெய்ன் மாவு - ஒரு கப்

பொடித்த பாதாம் - அரை கப்

பொடித்த சர்க்கரை - 1/3 கப்

உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்

பால் - தேவைக்கேற்ப

வெனிலா எஸன்ஸ் - அரை தேக்கரண்டி

செய்முறை:

அவனை 170 C ’ல முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி வைக்கவும்.

மாவுடன் பொடித்த பாதாமைச் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

ரூம் டெம்பரேச்சரில் உள்ள வெண்ணெயுடன் சர்க்கரையைச் சேர்த்து க்ரீம் பதத்தில் அடித்துக் கலக்கவும்.

க்ரீம் போல் வந்ததும் வெனிலா எஸன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அத்துடன் மாவைச் சேர்த்து 1 - 2 மேசைக்கரண்டி அளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். (பயன்படுத்தும் மாவிற்கு ஏற்ப பாலின் அளவு மாறுபடும். அதற்கேற்ப ஒவ்வொரு தேக்கரண்டியாக பால் சேர்த்துப் பிசையவும்).

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி

உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு இன்ச் இடைவெளிவிட்டு அடுக்கி

அவனில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

டேஸ்டி ஆல்மண்ட் குக்கீஸ் ரெடி.

குறிப்புகள்: