ஆல்ஃபபெட் கேக் (J)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டர் கேக் - ஒரு கிலோ (30 x 20 செ.மீ ட்ரேயில் பேக் செய்தது) கேக் போர்ட் (35 செ.மீ விட்டம்) பட்டர் க்ரீம் ஐசிங் (Medium Consistency) - ஆறு கோப்பைகள் கலரிங் - பச்சை & பிங்க் கோல்டன் சிரப் வெந்நீர் - கால் கோப்பை மெல்லிய கத்தி பாலட் நைஃப் பைப்பிங் பேக் (Piping Bag) Petal Nozzle (No 43) Leaf Nozzle (No 67) Writer Nozzle (No 2) Star Nozzle (No 27)

செய்முறை:

கேக் தட்டினுள் அமையக் கூடிய விதமாக கடதாசியில் J என்ற எழுத்தை வரைந்து வெட்டிக் கொள்ளவும். சுற்றிலும் ஐசிங் வைக்க இடைவெளி இருக்க வேண்டும்.

செய்து வைத்திருக்கும் கேக் வடிவத்தைப் பொறுத்து கடதாசியை துண்டுகளாக்கி

அந்த அளவில் கேக்கை வெட்டிப் பொருத்திக் கொள்ளவும். கேக்கை ஒரே அகலத்தில் நீள நீளமாக வெட்டி வைத்தால் மாற்றிப் போட்டு ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். வீண் ஆகாது. J வளைவை கூர்மையான கத்தியால் கூடுமானவரை சிலும்பல்கள் இல்லாமல் வெட்டிக் கொள்ளவும்.

கால் கோப்பை வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி கோல்டன் சிரப் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

பட்டர் க்ரீம் ஐசிங்கை (Medium Consistency) தயாரித்து வைக்கவும்.

போர்டில் கேக் வைக்கப் போகும் இடங்களிலும்

கேக் துண்டுகள் ஒன்றோடு ஒன்று பொருத்த வேண்டிய இடங்களிலும் ஐசிங் சுகர் வைத்து ஒட்டிவிடவும்.

கேக்கைச் சுற்றிலும் ப்ரஷ்ஷினால் சுகர் சிரப் தடவி

கேக்கின் மேற்பகுதிக்கு ஒரு மெல்லிய பூச்சு ஐசிங் பூசவும்.

அப்படியே தொடர்ந்து கேக்கைச் சுற்றிலும் பூசி முடிக்கவும். இப்போது ஐசிங்கின் வெளியே கேக் துகள்கள் ஒன்றிரண்டு மிதந்தாலும் பரவாயில்லை. பாத்திரத்தில் உள்ள ஐசிங்கில் கேக் துகள்கள் சேராமல் மட்டும் பார்த்துக் கொள்ளவும்.

அடுத்த பூச்சு சற்றுத் தடிமனாக வைத்து பாலட் நைஃப் முனையால் ஒற்றி எடுக்கவும்.

முழுவதும் இப்படிச் செய்து முடித்ததும் கேக் தட்டை சுத்தமாகத் துடைத்துவிடவும்.

மீதி ஐசிங்கைக் கொண்டு தட்டோடு உள்ள கேக் விளிம்பை மறைத்து ஸ்டார்ஸ் (Nozzle No 27) பைப் செய்து கொள்ளவும்.

கேக்கின் மேலே விரும்பிய விதத்தில் அலங்கரிக்கலாம். இந்தக் கேக்கில் உள்ள பூக்களை வரைய Petal Nozzle (no 43)

Leaf Nozzle (no 67)

Writer Nozzle (no 2) பயன்படுத்தினேன். பூக்களை நேரடியாக கேக்கின் மேலேயே வரைந்திருக்கிறேன். கேக் ஐஸ் செய்து மீந்ததிலேயே பச்சை

பிங்க் நிறங்களைக் கலந்து கொள்ளலாம்.

குறிப்புகள்: