ஆல்ஃபபெட் கேக் (A)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டர் கேக் - ஒரு கிலோ (30 x 20 cm ட்ரேயில் பேக் செய்துக் கொள்ளவும்.) கேக் போர்ட் (35 cm விட்டம்) பட்டர் கிரீம் ஐசிங் - நர்மதா குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது போல் இரண்டு மடங்கு தேவை கலரிங் - பச்சை & பிங்க் கோல்டன் சிரப் வெந்நீர் - கால் கோப்பை silver cachous

செய்முறை:

வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி கோல்டன் சிரப் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

கேக்கின் மேல் அலங்கரிக்க பயன்படுத்தும் சில்வர் சாகோஸ்.

palette knives - (no 3 & 4) உண்மையில் ஓவியர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள்தான். விலை அதிகமில்லை. கேக் வேலைக்கென்று தனியாக ஒரு செட் வாங்கி சமையலறையில் வைத்துக் கொள்ளவும். petal nozzle (no 43)

leaf nozzle (no 67)

writer nozzle (no 2)

பைப்பிங் பாக் (piping bag)

flower nail

கேக்கின் ஓரங்களை நீக்கி விட்டு ஒரே அகலமான (அண்ணளவாக 7 செ.மீ அகலம்) நீளத்துண்டுகளாக இரண்டு துண்டுகள் வெட்டவும்.

மீதி உள்ள பகுதியிலிருந்து நடுத்துண்டிற்கு ஏற்ற அளவில் ஒரு துண்டு வெட்டி எடுக்கவும். இரண்டு பக்கம் ஐசிங் வரும். அதனால் தேவையை விட ஒரு செ.மீ அளவு சிறிதாக வைத்து வெட்டிக் கொள்ளவும்.

A எழுத்தின் மேற்பகுதியிலும்

நடுவிலும் மேற்பக்கமும் சிறிது வெட்டவேண்டி இருக்கும்.

நர்மதா குறிப்பில் செய்முறைப்படி பட்டர் கிரீம் ஐசிங் (Medium consistency) தயாரித்துக் கொள்ளவும். (http://www.arusuvai.com/tamil/node/5526)

கேக்போர்டில் இடம் சரிபார்த்து எழுத்தை அமைத்துக் கொண்டு பெரிய துண்டுகள் இரண்டை மட்டும் அடியில் ஐசிங் சிறிது தடவி போர்டோடு ஒட்டிக் கொள்ளவும். காட்டியுள்ள பக்கம் இரண்டிலும் கோல்டன் சிரப் கலந்த நீரை ப்ரஷ்ஷினால் தடவி ஐசிங் பூசிக் கொள்ளவும். ஒடுக்கமான பகுதிகளுக்கு ஒடுக்கமான பாலட் நைஃப் (no 4) பயன்படுத்தினால் பூசுவது சுலபமாக இருக்கும். பாலட் நைஃபைத் துடைத்துவிட்டு

பேப்பர் டவலால் அழுத்திச் சுற்றிக் கொண்டு கவனமாக இடையில் உள்ள போர்ட் பகுதியைச் சுத்தம் செய்துக் கொள்ளவும்.

நடுப்பகுதிக்கான சிறிய துண்டின் காட்டியுள்ள பக்கங்களிரண்டை மட்டும் இதே போல் ஐஸ் செய்துக் கொள்ளவும். கீழ்பக்கம் சிறிது ஐசிங் தடவி

கவனமாகப் பொருத்தி ஒட்டிவிடவும்.

கேக் முழுவதையும் இதே போல் ஐஸ் செய்துக் கொள்ளவும்.

ஐசிங் சீராகப் பூசி இருக்க வேண்டும் என்பது இல்லை. உயரங்களை மட்டும் சரிபார்த்துக் கொண்டால் போதும். பிறகு பாலட் நைஃப் முனையை ஐசிங் மேல் மெதுவே வைத்து வைத்து உயர்த்தி விடவும். ஐசிங் தூக்கியபடி நிற்கும். எழுத்தின் உட்பக்கம் வேலை செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

அமைப்பு திருப்தியாக வந்ததும் போர்டைச் சுத்தம் செய்து விடவும்.

மீதி உள்ள ஐசிங்கில் மூன்றில் ஒரு பாகம் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து தேவைக்கு ஏற்றபடி சில துளிகள் பச்சை நிறம் சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும். மீதியில் பூவுக்குப் பொருத்தமாக பிங்க் நிறம் குழைத்து விரும்பியவாறு பூக்களையும் இலைகளையும் பைப் செய்துக் கொள்ளவும். தேவைகேற்றது போல் காம்புகளும் கொடிகளும் வரைந்து கொள்ளலாம்.

ஐசிங் தளர்வான பதமாக வைத்து நேரடியாக கேக்கின் மேலேயே பூக்களை வரைந்திருக்கிறேன். (சற்று இறுக்கமான பதத்தில் flower nail மேல் பூக்களை பைப் செய்து கேக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.) மீதி இடங்களில் சீரான இடைவெளியில் silver cachous வைத்து மெதுவே அழுத்தி விடவும்.

குறிப்புகள்: