ஆரஞ்சு பிஸ்கட்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 200 கிராம்
ஜீனி - 120 கிராம்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பேகிங் பௌடர் - முக்கால் தேக்கரண்டி
சோடா - அரைத்தேக்கரண்டி
கிஸ்மிஸ் - 100 கிராம்
ஆரஞ்சு எசன்ஸ் - 2 தேக்கரண்டி
ஆரஞ்சு பழச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
டால்டா - 30 கிராம்
பால் - சிறிது
செய்முறை:
மைதாமாவுடன் பேகிங் பவுடர், சோடா சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
ஜீனியை பொடி செய்து கொண்டு அதனுடன் டால்டாவையும், வெண்ணெயையும் சேர்த்துக் கலக்கவும். கூடவே கிஸ்மிஸ் மற்றும் ஆரஞ்சு எசன்ஸையும் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மாவு மற்றும் ஜீனி கலவைகளை ஒன்றாய் சேர்த்துக் கொள்ளவும்.
ஆரஞ்சு சாற்றுடன் சிறிது பால் சேர்த்து மாவினில் சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
தேவையான பிஸ்கட் வடிவத்தில் மாவினை வெட்டிக் கொண்டு ஒரு நெய் தடவிய தட்டில் அடுக்கவும்.
அதனை ஓவனில் வைத்து 350 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடங்கள் வேகவிடவும்.