ஆரஞ்சு பான்கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - முக்கால் கப்

ஆரஞ்சு - 1

எலுமிச்சை - 1

கல்கண்டு - 100 கிராம்

முட்டை - 1

பால் - ஒன்றரை கப்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

மைதாமாவினை பால், முட்டை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து தனியே வைத்துக் கொள்ளவும்.

கல்கண்டு துகள்களை ஆரஞ்சு பழத்தோலின் மீது தேய்த்து அதற்கு ஆரஞ்சு மணமூட்டவும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோலினை மெல்லிய நீளத்துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும். சாற்றினை தனியே பிழிந்து எடுத்து வைக்கவும்.

கல்கண்டு, ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு இவற்றுடன் நீள இழைகளாய் நறுக்கிய தோல்களையும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேகவைத்து சாஸாக எடுத்துக் கொள்ளவும்.

ஒட்டாத வாணலியில் கரைத்து வைத்துள்ள மாவினை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு கேக்காக செய்துகொள்ளவும்.

அதனுடன் ஆரஞ்சு சாஸினை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: