ஆரஞ்சு சாக்லேட் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 250 கிராம் வெண்ணெய் - 250 கிராம் பொடித்த சீனி - 250 கிராம் முட்டை - 4 பேக்கிங் பெளடர் - 2 தேக்கரண்டி ஆரஞ்சு எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீர் - 5 மேசைக்கரண்டி ஆரஞ்சு ஜுஸ் பெளடர் - 3 மேசைக்கரண்டி சாக்லேட் சாஸ் தயாரிக்க: சிங்கிள் க்ரீம் - 120 மி.லி சாக்லேட் துண்டுகள் - 250 கிராம்

செய்முறை:

மைதாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து 3 முறை சலித்து வைத்துக் கொள்ளவும்.

கேக் தயாரிக்கும் விதம்: மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் ஃபுட் ப்ராஸசரில்(food processor) போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

சலித்து வைத்திருக்கும் மைதா மாவை சிறிது சிறிதாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக் கொண்டே அடிக்கவும் அல்லது ஒரு ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கி விடவும்.

ஆரஞ்சு ஜூஸ் பெளடரையும் தண்ணீரையும் நன்கு கலக்கிக் கொண்டு பின்னர் எசன்ஸையும் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை அவனில் வைத்து 160 டிகிரி C-ல் 25 - 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

கேக் வெந்ததும் வெளியில் எடுத்து ஆற வைக்கவும்.

சாக்லேட் சாஸ் தயாரிக்கும் விதம்: சிங்கிள் க்ரீமை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடு செய்யவும். கொதி நிலை வந்ததும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும். இளகும் சாக்லேட் துண்டுகளை ஒரு மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

சாக்லேட் சாஸ் தயாரானதும் அதை ஆற வைத்திருக்கும் ஆரஞ்சு கேக் மீது சமமாகத் தடவி விடவும்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மேலே விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அலங்கரித்துக் கொள்ளலாம். சுவையான ஆரஞ்சு சாக்லேட் கேக் தயார்.

அறுசுவையில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக விளக்கப்படங்களுடன் செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

குறிப்புகள்: