ஆரஞ்சு கேக் (1)
0
தேவையான பொருட்கள்:
வெண்ணெய்-250 கிராம்
சீனி- 250 கிராம்
முட்டை- 4
மைதா மாவு- 250 கிராம்
பேக்கிங் பெளடர்- 2 டீஸ்பூன்
ஆரஞ்சு எஸென்ஸ்- 2 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் பெளடர்- 3 மேசைக்கரண்டி
தண்ணீர்- 5 மேசைக்கரண்டி
செய்முறை:
மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.
மைதாவையும் பேக்கிங் பெளடரையும் 3 முறை சலித்து, கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே அடிக்கவும் அல்லது ஒரு ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கவும்.
ஆரஞ்சு ஜூஸ் பெளடரையும் தண்ணீரையும் நன்கு கலக்கி அதையும் எஸென்சையும் சேர்த்து கலக்கவும்.
160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஆறியதும் துண்டுகள் செய்யவும்.
இதற்கு ஆரஞ்சு ஐஸிங் கேக் மேலே தடவுவது இன்னும் சுவையைத் தரும்.