ஆப்பிள் மஃபின்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு (all purpose flour) – 4 கப் மாஜரின் – ஒரு கப் சீனி (சுகர்) – ஒரு கப் ப்ரவுன் சீனி (ப்ரவுன் சுகர்) – 3/4 கப் முட்டை – 4 பால் – ஒரு கப் பேக்கிங் பவுடர் – 4 தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி கறுவா/ பட்டை தூள் – ஒரு மேசைக்கரண்டி நட்மெக் (nutmeg) தூள் – 2 தேக்கரண்டி ஆப்பிள் – 2

செய்முறை:

மாவுடன் கறுவா/பட்டை தூள்

உப்பு

பேக்கிங் பவுடர் மற்றும் நட்மெக் தூளை சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும். அவனை 350 Fல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.

ஆப்பிளை மேல் தோல் நீக்கி விட்டு நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இரு வகை சீனிகளுடன் மாஜரீனை போட்டு நன்கு 3 - 4 நிமிடங்கள் அடித்துக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும். இப்பொழுது அதிக நேரம் அடிக்க தேவையில்லை.

அதன் பிறகு வெனிலா எசன்ஸை சேர்த்து இன்னும் சில நொடிகள் அடித்துக் கொள்ளவும்.

சலித்து வைத்திருக்கும் மாவுகலவையை இரண்டாக பிரித்து அதில் ஒரு பங்கை முதலில் சேர்த்து அடிக்கவும்.

பிறகு அரை கப் பாலை சேர்த்து அடித்துக் கொண்டு அதனுடன் மீதமுள்ள மாவு கலவையை சேர்த்து அடித்துக் கொள்ளவும். கடைசியாக மீதிமிருக்கும் பாலையும் ஊற்றி அடிக்கவும்.

இந்த கலவையுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும்.

மஃபின் கப் தட்டுகளில் பேப்பர் கப்புகளை வைத்து மஃபின் கலவையை முக்கால் பாகம் நிரப்பி வைக்கவும். பிறகு முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

ஆப்பிள் மஃபின் ரெடி. இந்த குறிப்பினை செய்து காட்டியவர்

கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான செல்வி. விசா அவர்கள். இவர் தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார்

கூடவே சமையலும் சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும்

அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக்

குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர்

வரைதல்

கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.

குறிப்புகள்: