ஆப்பிள் கொய்யா ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொய்யா - 2

ஆப்பிள் - ஒன்று

சீனி - 2 கப்

எலுமிச்சை சாறு - 8 மேசைக்கரண்டி

செய்முறை:

பாதிப் பழுத்த கொய்யாவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஆப்பிளையும், கொய்யாவையும் தோல் நீக்காமல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பழத்துண்டங்களை எடுத்துக் கொண்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

நீர் முழுதும் உறிஞ்சப்பட்டு, பழங்கள் வெந்தவுடன் இறக்கி கையினால் நன்கு மசிக்கவும்.

மசித்தவற்றை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு தவாவை சூடு படுத்தி அதில் பழ விழுதினைப் இட்டு, சீனி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி சூடாக்கவும்.

இளஞ்சிவப்பு நிறம் வரும் வரை நன்கு கிளறி வேக விடவும். பிறகு இறக்கி காற்று புகாத சுத்தமான பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும்.

குறிப்புகள்: