ஆப்பிள் கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கப்,

சர்க்கரை - 1 கப்,

டால்டா அல்லது வெண்ணெய் - 1/2 கப்,

முட்டை - 3,

ஆப்பிள் - 2 கப் (தோல் நீக்கி, பொடியாக நறுக்கியது),

பேக்கிங் சோடா - 2 தேக்கரண்டி,

ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி,

கிராம்பு, பட்டை, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி,

முந்திரி - 10,

உலர் திராட்சை - 1/4 கப்,

எசன்ஸ் - சிறிது.

செய்முறை:

சர்க்கரையை பொடித்து வைக்கவும்.

மைதாவை பேக்கிங் சோடா, ஆப்ப சோடா, கிராம்பு, பட்டை, ஏலக்காய் தூள் கலந்து, 2 முறை சலிக்கவும்.

முட்டையை அடித்து, ஆப்பிள் துண்டுகளை அதனுடன் கலந்து வைக்கவும்.

வெண்ணெய், சர்க்கரை சேர்த்து மிருதுவாக வரும் வரை கலக்கவும்.

அதனுடன் மைதா கலவை, முட்டை கலவை என மாற்றி மாற்றி கலக்கவும்.

முந்திரியை ஒடித்து, திராட்சையும் சேர்த்து மாவுடன் கலக்கவும்.

கேக் ஓவனில், வெண்ணெய் தடவி மைதாவை லேசாக தூவி தட்டி விட்டு கலந்த மாவை ஊற்றி பேக் செய்யவும். (அனல் மிதமாக இருக்க வேண்டும்).

கேக் ஓவன் என்றால் திறந்து, ஒரு குச்சியால் குத்தி பார்க்க, ஒட்டாமல்

இருந்தால் வெந்ததாக பொருள்.

குறிப்புகள்: