ஆப்பில் கேக்
தேவையான பொருட்கள்:
பட்டர் - 250கிராம்
சீனி -250கிராம்
முட்டை -5
வனிலா -1மே.கரண்டி
பேக்கிங்பவுடர் -1மே.கரண்டி
ஆப்பில் - 1கிலோ
ஐசிங்சுகர் -150கிராம்
செய்முறை:
ஆப்பிலைத்தோலுரித்து மெல்லிய நீளத்துண்டுகளாக வெட்டவும்.
பின்பு மாவுடன் பேக்கிங்பவுடரை கலந்து இரண்டு அல்லது மூன்று தடவை அரிக்கவும்.
முட்டையையும் மஞ்சள்க்கரு தனியாகவும், வெள்ளைக்கரு தனியாகவும், நுரை பொங்க அடித்து வைக்கவும்.
கேக் அடிக்கும் பாத்திரத்தில் பட்டரையும், சீனியையும் போட்டு நன்றாக அடிக்கவும்.
சீனி நன்றாகக்கரைந்தவுடன் அடித்த முட்டை மஞ்சள்க்கருவை அக்கலவையுடன் சேர்த்து அடிக்கவும்.
அதேபோல் பின் வெள்ளைக்கருவையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
பின் அரித்தெடுத்த மாவை அதனுடன் சிறிது சிறிதகச்சேர்த்து அடிக்காமல் நன்றாகக்கலக்கவும்.
பின் கேக்பேக்செய்யும் தட்டில் பட்டர் பூசிய பேப்பர் விரித்து அதில் ஆப்பில்த்துண்டுகளை ஒழுங்காக அடுக்கி அதன் மேல் கேக்கலவையை ஊற்றி பரவி 200-220 பாகை வெப்பனிலையில், 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
அதன் பின் ஐசிங்சுகரிற்குள் 2 மே.கரண்டி குளிர்ந்த நீர் சேர்த்துக்கலக்கி பேக் செய்த சூடான கேக்கின் மேல் ஊற்றி பரவி விடவும்.
கேக் நன்றாக ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.