அப்பிள் பை
தேவையான பொருட்கள்:
அப்பிள் - 4 - 5
சீனி / பிரவுண் சீனி - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
கறுவாத்தூள்(cinnamon powder) - 1 சிட்டிகை
எலுமிச்சம்பழம் - 1
====
மா - 2 கப்
சீனி - 1 மேசைக்கரண்டி
உப்பு
பட்டர் - 1/2 கப் (8 மேசைக்கரண்டி / 1 stick)
செய்முறை:
அவனை 425 Fஇல் முற்சூடு பண்ணவும்.
மாவினுள் உப்பு, சீனி சேர்த்து கலக்கவும்.
பட்டரை சிறிய துண்டுகளாக வெட்டவும் (உருக்க வேண்டாம்)
பின்னர் மாவினுள் பட்டரை கலந்து ஐஸ் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக குழைக்கவும். (அழுத்த வேண்டாம்)
பின்னர் அரைவாசியாக பிரித்து பிளாஸ்டிக் உறையினுள் போட்டு ஃபிரிட்ஜில் 1/2 மணித்தியாலங்கள் வைக்கவும்.
எலுமிச்சம் பழத்தில் தோலை துருவி 1 தேக்கரண்டி எடுத்து வைக்கவும்.(lemon zest)லெமன் ஜூஸ் 1 மேசைக்கரண்டி எடுத்து வைக்கவும்.
அப்பிளை கழுவி சுத்தப்படுத்தி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
பின்னர் இத் துண்டுகளுடன் சீனி, பிரவுண் சீனி, உப்பு, கறுவாத்தூள், லெமன் தோல்(zest), லெமன் ஜூஸ் சேர்த்து கலக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு மிதமான சூட்டில் அவிய விடவும்.
தண்ணீர் ஓரளவு வற்றி அப்பிள் துண்டுகள் வெந்ததும் இறக்கி வடித்து வைக்கவும். (அப்பிள் துண்டுகள் கரைய கூடாது)
ஃபிரிட்ஜில் வைத்த மாவு உருண்டையில் ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் வைத்து சப்பாத்திக்கு உருட்டுவதுபோல பெரிய வட்டமாக தட்டவும். (பெரிய தோசை அளவு வட்டம் அல்லது பை பானிற்குள் வைக்கும் அளவு)
இதனை பட்டர் அல்லது பேக்கிங் ஸ்பிறே பூசிய 8 அங்குல பை பானின் (8" pie pan) உள்ளே வைத்து கரைகளை அழுத்தி பானுடன் சேர்த்து ஒட்டவும். (பானின் வடிவில் கிண்ணம் போல இருக்கும்)
பின்னர் அவித்த அப்பிள் துண்டுகளை இதனுள் போட்டு நிரப்பவும்.
மற்றைய பாதி மாவுருண்டையை எடுத்து சிறிய வட்டமாக தட்டி அப்பிளின் மேலே போட்டு முழுவதுமாக மூடவும். Or தட்டிய மாவை சிறிய கீலங்களாக வெட்டி பின்னல் போல போட்டும் மூடலாம்.
பின்னர் இரு மா தகடுகளையும் ஒன்றாக சேர்த்து ஓரங்களை அழுத்தி விடவும். (மேலதிகமாக இருக்கும் மாவை வெட்டி அகற்றவும்)பின்னர் கத்தியால் மேல் மாவில் X வடிவில் வெட்டி விடவும்.
பின்னர் மாவின் மேற்பகுதியில் ஒரு பிரஷால் சிறிது தண்ணீர் தடவி பிரவுண் சீனி சிறிது தூவி விடவும்.
பின்னர் இதனை 425 F இல் முற்சூடு படுத்திய அவனில் 25 - 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சுவையான அப்பிள் பை தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறாவும்.
குறிப்புகள்:
அப்பிளை அவித்து வடிய விட்டு பெறப்பட்ட சிரப்பினுள் சிறிது ஐஸ் தண்ணீர் சீனி சேர்த்து அப்பிள் ஜூஸாக அருந்தலாம்.