அன்னாசி கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அன்னாசி - 5 துண்டுகள் மைதா மாவு - 3 கப் சர்க்கரை - 2 கப் கெட்டி தயிர் - ஒரு கப் எண்ணெய் - ஒரு கப் முட்டை - 3 பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அன்னாசியை தோல் சீவி வளையங்களாக நறுக்கவும்.

முட்டைகளை உடைத்து ஊற்றி அடிக்கவும். பேக்கிங் பவுடர்

எண்ணெய்

தயிர்

சர்க்கரையையும் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.

எசன்ஸ்

மைதா மாவு இரண்டையும் சர்க்கரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

கேக் தட்டில் வெண்ணெயை தடவி அதில் கலவையை ஊற்றவும். அன்னாசி வில்லைகளை கேக் தட்டில் மாவு கலவையின் மேல் வைக்கவும்.

180 டிகிரி சூட்டில் 35 நிமிடம் வரை அவனில் வைத்து பேக் செய்யவும். கத்தியால் குற்றி பார்த்து கலவை ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டதாக கொள்ளவும்.

சுவையான அன்னாசி கேக் ரெடி.

குறிப்புகள்: