அன்னாசிப் பழ ஜாம் (1)
0
தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பழம் - ஒன்று
சீனி - 3 1/2 கப்
மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
அன்னாசி பழத்தில் மேலே உள்ள தோலை சீவி விடவும்.
பிறகு மெல்லிய வட்டவடிவமாக நறுக்கி நடுவில் உள்ள அழுத்தமான பகுதியை ஒரு சிறு மூடி வைத்து அழுத்தி எடுத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
அதில் பழங்களை போட்டு ஐந்து நிமிடம் வேகவிட்டு கிளறி அதனுடன் கலர் பொடி சேர்த்து இறக்கி விடவும்.
ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.