அன்னாசிப் பழ ஜாம்
0
தேவையான பொருட்கள்:
அன்னாசிப் பழம் - பாதி சீனி - ஒரு கப் மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
அன்னாசிப் பழத்தின் தோலைச் சீவி விட்டு
வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதன் நடுவில் உள்ள தடிமனான பகுதியை வெட்டி நீக்கிவிடவும்.
பிறகு பழத்தைப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி
கலர் பவுடர் சேர்த்து சீனி கரையும் வரை கொதிக்கவிடவும்.
சீனி கரைந்தவுடன் அன்னாசிப் பழத் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
பழத் துண்டுகள் வெந்து
பாகுடன் சேர்ந்து திக்காகும் வரை வைத்திருந்து இறக்கவும்.
சுவையான அன்னாசிப் பழ ஜாம் தயார்.