அன்னாசிப்பழ ஜாம்
0
தேவையான பொருட்கள்:
அன்னாசிப்பழம் - 1
சீனி - 1 - 1/2 கப் (தேவைக்கேற்ப)
கேசரிப்பவுடர் - 2 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - 1 சொட்டு
செய்முறை:
அன்னாசிப்பழத்தினை தோல் நீக்கி அதனை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதினை வடிகட்டியினால் வடித்து ஜூஸை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
அன்னாசிப்பழ ஜூஸில் தேவையான அளவு சீனியை போட்டு கரைத்து அதில் கலரையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டிலேயே கிளறிக்கொண்டே இருக்கவும்.
ஓரளவு கெட்டியாக வரும் போதே ரோஸ் எசன்ஸ் விட்டு கிளறி ஆற வைக்கவும். பின்னர் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.