ஃப்ரூட் கேக் christmas cake

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - ஒரு கோப்பை

சர்க்கரை - ஒரு கோப்பை

வெண்ணெய் - ஒரு கோப்பை

முட்டை - இரண்டு

உலர்ந்த பழக்கலவை - ஒரு கோப்பை

(திராட்சை, சிவப்பு பச்சைநிற செர்ரி)

வால்னட்(அ)முந்திரிப் பருப்பு - கால் கோப்பை

பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி

சுக்கு தூள் - கால் தேக்கரண்டி

கேக் ஸ்பைஸ் மிக்ஸ் - கால் தேக்கரண்டி

(பட்டை, கிராம்பு, ஜாதிக்காய்)

கேரமல் கலர் - ஒரு தேக்கரண்டி

நறுக்கிய ஆரஞ்சு எலுமிச்சை தோல் - தலா ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அவனை 300 டிகிரி Fல் சூடுப்படுத்த வேண்டும்.

பழங்களையும், பருப்பையும் பொடியாக நறுக்கி சிறிது மைதா மாவை தெளித்து கலந்து வைக்கவும்.

மைதாவில் பேக்கிங் பவுடர், சோடா, சுக்குத்தூள் மற்றும் ஸ்பைஸ் மிக்ஸ்ஸை சேர்த்து ஜல்லடையால் அரித்து வைக்கவும்.

கலக்கும் இயந்திரத்தில் வெண்ணெய் சர்க்கரையை போட்டு நன்கு நுரைக்க கலக்கவும்.

பிறகு முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கவும். தொடர்ந்து மைதாமாவு, நறுக்கிய பழக்கலவை, நறுக்கிய பழத்தோல் மற்றும் கேரமல் கலர் ஆகியவற்றை போட்டு கலந்து வைக்கவும்.

பிறகு கேக் செய்யும் பாத்திரத்தில் பட்டர் பேப்பரை அடியிலும் சுற்றிலும் வைத்து தயாரித்த கலவையை பரவலாக ஊற்றவும்.

இதனை சூடாக்கிய அவனில் குறைந்தது ஒரு மணி நேரம் வைத்திருந்து வெந்ததை உறுதி செய்த பிறகு வெளியில் எடுக்கவும்.

இதனை அப்படியே அலுமினிய காகித்தால் இறுக்கமாக மூடி வைத்து ஆற வைத்து பரிமாறலாம். அல்லது அப்படியே வைத்திருந்து அடுத்த நாள் எடுத்து பரிமாறினால் நன்கு ஊறி சுவை கூடுதலாக இருக்கும்.

குறிப்புகள்: