ஃப்ரூட் கேக் (1)
தேவையான பொருட்கள்:
மைதாமாவு - 200 கிராம் சர்க்கரை - 150 கிராம் வெண்ணெய் - 150 கிராம் (Salted Butter) முட்டை - மூன்று ட்ரை ஃப்ரூட்ஸ் - 150 கிராம் (வால் நட்ஸ்
முந்திரி
பாதாம்
ரெய்சின்ஸ்) வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி கரம் மசாலா - கால் தேக்கரண்டி (விரும்பினால்) விரும்பினால் ஆரஞ்சு
லெமன் Zest சேர்க்கலாம்
செய்முறை:
ஃப்ரூட் கேக் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் (ரூம் டெம்ப்ரேச்சரில் உள்ள) வெண்ணெயை எடுத்து ஒரே டைரக்ஷனில் நன்றாக பீட் செய்யவும்.
இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
பின்னர் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு அடிக்கவும்.
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2 அல்லது 3 முறை நன்கு சலித்துக் கொள்ளவும். இதனுடனே கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.
மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்
சர்க்கரை
முட்டை கலவையில் சேர்க்கவும்.
இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். ட்ரை ஃப்ரூட்ஸை மைதா மாவு சேர்த்து கலக்கவும். (மைதா சேர்ப்பதால் ட்ரை ஃப்ரூட்ஸ் அடியில் தங்காது.) இந்த ட்ரை ப்ரூட்ஸை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தின் (கேக் ட்ரேயின்) ஓரத்தில் வெண்ணெய் தடவி
மைதா மாவை தூவி கொள்ளவும். இந்த கேக் கலவையை நாண்ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றவும்.
அவனை 325 டிகிரி F க்கு முற்சூடுப்படுத்த வேண்டும். பின்னர் கேக் கலவையை அவனில் வைத்து 45 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சில சமயம் கேக்கின் மைய பகுதி மட்டும் வெந்து இருக்காது. அப்போது மேலும் 5 அல்லது 10 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். கேக் வெந்துவிட்டதா என்று உறுதி செய்த பின்
அவனை ஆஃப் செய்யவும்.
கேக் வெந்ததும்
வெளியில் எடுத்து நன்கு ஆறியதும் சர்விங் ப்ளேட்டுக்கு மாற்றலாம். சுவையான ஃப்ரூட் கேக் தயார்.