ஃப்ரூட் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 2 கப் வெண்ணெய் - மைதாவின் அளவே ( மைதா 200 கி எனில் வெண்ணெயும் 200 கி) சர்க்கரை - 1 1/2 கப் ட்ரை ஃப்ரூட்ஸ் - அரை கப் (பாதாம்

முந்திரி

டேட்ஸ்

வால்நட் மற்றும் திராட்சை) பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி முட்டை - 4 ( 50 கிராம் மாவுக்கு 1 முட்டை கணக்கு ) வெனிலா எசன்ஸ் - 3 துளிகள் சாக்லேட் சிரப் - சிறிது

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும். மைதாவை பேக்கிங் பவுடருடன் நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்

முட்டை

சர்க்கரை தனியே தனியே மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு ஒவ்வொரு முறையும் நன்றாக அடிக்க வேண்டும். முட்டையை நன்கு நுரை வர அடிக்க வேண்டும்.

இந்த கரைசலுடன் மைதா மாவை சிறிது சிறிதாக போட்டு மென்மையாக கலக்கவும். பின் ட்ரை ஃப்ரூட்களை போட்டு வெனிலா எசன்ஸை சேர்த்து கலக்கவும்.

பின் இந்த கரைசலை ட்ரேயில் ஊற்றி 325 சூட்டிற்கு முற்சூடு செய்து 45 நிமிடம் அவனில் வைக்கவும்.

நன்கு பிரவுன் கலரில் மாறி கேக் ரைஸானதும் அவனை திறந்து வைத்து 5 நிமிடம் கழித்து வெளியே எடுக்கவும்.

சாக்லேட் சிரப்பை கேக்கின் மீது வேண்டும் டிசைனில் ஊற்றிக் கொள்ளவும். யம்மி கேக் ரெடி.

குறிப்புகள்: