ஃபாண்டன்ட் பூக்கள் இலைகள்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஃபாண்டன்ட் - ஒரு பிடி அளவு ஐஸிங் சுகர் - சிறிது நிறங்கள் - மஞ்சள்

பச்சை கூரான முனையுள்ள கத்தரிக்கோல் மோல்டிங் டூல்ஸ் ஹண்ட்ரட்ஸ் அன்ட் தௌசண்ட்ஸ் (Hundreds and Thousands)

செய்முறை:

பூக்கள் செய்முறை: ஃபாண்டன்ட்டில் பிடித்த ஷேட் கிடைக்கும் வரை துளித்துளியாக மஞ்சள் நிறம் கலந்து நன்கு பிசைந்து

க்ளிங் ராப் (Cling Wrap) போட்டு சுற்றி வைக்கவும். ஒரு சிறிய நிலக்கடலை அளவு எடுத்து மொட்டு போல உருட்டிக் கொள்ளவும்.

கத்தரிக்கோல் முனையால் குறுக்காக + அடையாளம் போல வெட்டிக் கொள்ளவும்.

நடுவில் டூலைக் கொடுத்து கவனமாகப் பிரிக்கவும்.

கூரான டூல் முனை கொண்டு இதழ்களை வடிவமைக்கவும். டூலை வைத்து மெதுவாக அழுத்திக்கொண்டே உருட்டவேண்டும். இதழ்களை விருப்பம் போல கூராகவோ

வளைவாகவோ அமைத்துக் கொள்ளலாம்.

படத்தில் காட்டியுள்ள வடிவ டூல் கொண்டு நடுவில் சற்று அழுத்தி எடுக்க உள்ளே சாதாரணமாக பூவின் நடுவில் இருக்கும் கோடுகள் போல அமைப்பு கிடைக்கும்.

அதை அப்படியே ஐஸிங் டிப்களுக்கு மாற்றிக் கொள்ளவும். டிப்பின் அடியில் க்ளூடாக் வைத்து ஒட்டி நிறுத்தினாற்போல் உலர விடவும்.

மொட்டுகள் செய்முறை: பூக்கள் செய்முறையின் முதல் படியில் சொல்லி இருப்பது போல செய்து

அவற்றுக்கு இதழ்கள் மூடியிருப்பது போல சுற்றிலும் மூன்று நாலு கோடுகள்

பாலட் நைஃப் அல்லது கத்தரிக்கோல் முனையால் வரைந்து கொண்டால் அழகான மொட்டுகள் கிடைக்கும்.

புல்லிகள் செய்முறை: மீதி ஃபாண்டன்ட்டுடன் நீல நிறத்தில் சில துளிகள் சேர்த்தால் பச்சையாகும். இதைக் கொண்டு பச்சை மொட்டுகள் செய்து மூன்று பிரிவுகளாக வெட்டிக் கொண்டு இதழ்கள் வடிவமைத்தது போலவே செய்து நடுவிலும் ஒரு ஆழமான குழி அழுத்திக் கொண்டால் புல்லிகள் தயார்.

பூக்களையும்

மொட்டுக்களையும் காம்பு முனையில் ஈரம் தொட்டு வைத்து சேர்த்து ஒட்டிக் காயவிடலாம். அல்லது கடைசியில் கேக்கில் வைக்கும் போது ஐஸிங் கொண்டு பொருத்திக்கொள்ளலாம். தேவையைப் போல் காம்புகளின் நீளத்தை அமைத்துக்கொள்ளலாம். உலர ஆரம்பித்தபின் சிறிதாக்க வேண்டியிருந்தால் கத்தரிக்கோலால் நறுக்கி எடுக்கலாம்.

இலைகள் செய்முறை: பச்சை நிற ஃபாண்டன்ட்டில் ஒரு சிறிய துண்டு எடுத்து இப்படி அமைத்துக் கொள்ளவும்.

அதை தட்டையாக அழுத்தவும்.

கத்தரிக்கோல் முனையால் சிறிய வெட்டுகள் போடவும்.

குச்சியை வைத்து அழுத்தி இலை வடிவம் கொண்டுவரவும். நடு நரம்பையும் அழுத்திக் கொள்ளவும்.

தட்டையாக வைக்காமல் வேறு பொருட்கள் மேல் வளைத்து வைத்து உலரவிடவும். நினைவாக பொருட்களின் மேல் ஐஸிங் சுகர் பூசி விடவும். இல்லாவிட்டால் ஒட்டிவிடக்கூடும். இலைகள்

பூவிதழ்கள் & புல்லிகளின் விளிம்புகள் எவ்வளவு மெல்லிதாக அமைகின்றனவோ அவ்வளவு அழகாக இருக்கும்.

விரல்கள் நடுவே உருட்டி வளைத்து பச்சை நிறத்தில் இப்படி சில கொழுக்கிகளும் செய்து வைக்கவும். (மெல்லிதாக இருப்பதால் உலர்ந்த பின் சட்டென்று உடைந்துவிடும். கவனமாகக் கையாளவும்).

இனி இவைகளை விருப்பம் போல கேக்கில் வைத்து அலங்கரிக்கலாம். கேக்கில் வைக்கும்போது

ஒரு ப்ரஷ்ஷால் சிறிது பட்டர் ஐஸிங் தொட்டு பூவின் நடுவில் வைத்து

அதன் மேல் ஹண்ட்ரட்ஸ் அன்ட் தௌசண்ட்ஸ் தூவி ப்ரஷ் காம்பால் மெதுவே அழுத்தி ஒட்டிவிடவும். மேலதிகமானவை பூ உலர்ந்த பின் கவிழ்த்துப் பிடித்து ப்ரஷ்ஷால் மெதுவாகத் துடைக்க வந்துவிடும். இவற்றை முன்பே ஒட்டிவைக்கலாம். ஈரலிப்பான காலநிலையில் நிறம் கசிந்து பூவின் அழகைக் கெடுத்துவிடக்கூடும்.

குறிப்புகள்: