ஹைதராபாத் பகாறா கானா
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 4
புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு
தயிர் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
--------------------
-- முதலில் தாளிக்க --
--------------------
எண்ணெய் – 1 மேஜை கரண்டி
நெய் – 1 மேஜை கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 3
ஏலக்காய் - 2
செய்முறை:
பாஸ்மதி அரிசியினை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
வெங்காயத்தினை நீளமான வெட்டி கொள்ளவும்.
பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியினை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு அத்துடன் வெங்காயம் சேர்த்து 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.
அதன்பிறகு, புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வதக்கவும்.
இத்துடன் தயிர் சேர்த்து கலந்து 1 நிமிடம் வதக்கவும்.
ஊறவைத்துள்ள அரிசியினை கழுவி தண்ணீர் வடித்து, அரிசியினை மட்டும் வதக்கிய பொருட்களுடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து கொள்ளவும்.
குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய பகாறாகானா.
குறிப்புகள்:
சமைக்க தேவைப்படும் நேரம்; 25 – 30 நிமிடங்கள்
தேங்காய் பால் சேர்க்க வேண்டாம். தேங்காய் பால் சேர்த்தால் பிரிஞ்சி மாதிரி இருக்கும்
விரும்பினால் தயிரின் அளவினை சிறிது அதிகம் சேர்த்து கொள்ளலாம். .
காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்,
இந்த ரைஸ் கண்டிப்பாக் வெள்ளை கலரில் தான் இருக்க வேண்டும், இதில் தக்காளியினை முதலிலேயே சேர்த்தால் கலர் மாறிவிடும். அதனால் கடைசியில் சேர்க்க வேண்டும்.
இத்துடன் Spicyயான குழம்பு, குருமா, தயிர் பச்சடி , Boiled eggs போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.