ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (2)
தேவையான பொருட்கள்:
அரிசி - 250 கிராம்
சிக்கன் - 150 கிராம்
சுருள் பட்டை - 4
பிரியாணி இலை - சிறிதளவு
ஏலக்காய் - 4
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 100 கிராம்
பச்சைமிளகாய் - 4
புதினா - ஒரு கொத்து
கொத்துமல்லி - 1 கொத்து
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
தயிர் - தேவையான அளவு
நெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை முக்கால் வேக்காடு வேக வைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
வெங்காயத்தை நைசாக அரிந்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய கடாயில் வனஸ்பதியை உருக வைத்து அதில் பட்டை கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பொரியவிடவும்.
அடுத்து நைசாக வெட்டிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு நறுக்கியத் தக்காளித்துண்டுகளைப் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்க்கவும்.
அடுத்து கோழிக்கறியைச் சேர்த்து வதக்கவும். பிறகு தயிர் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகப்பொடி, தேவைகேற்ப உப்பு சேர்த்து வதக்கி நன்கு கிளறவும்.
அதன்பின் சிறிய அளவு கிரேவியை கடாயில் இருந்து எடுத்து கொண்டு முன்னதாக வேகவைத்து எடுத்துள்ள அரிசியை அதில் போடவும்.
அரிசியை சமப்படுத்தி அதன் மேல் கிரேவியை ஊற்றி சிறிது துளையிட்டு அதில் நெய்யை ஊற்றி மல்லி தலையை போட்டு மூடவும்.
மூடியின் மீது நெருப்புத் துண்டங்களைப் போட்டு தம்மில் வைக்கவும். சிறிது நேரம் வைத்திருந்து அரிசி நன்கு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.