வெஜ் பிரியாணி (5)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
காலிஃப்ளவர், காரட், பீன்ஸ் & பட்டாணி - 2 கப்
ஷாஜீரா - 2 டீஸ்பூன்
லவங்கம் - ஒரு டீஸ்பூன்
பட்டை - 4 பெரிய துண்டுகள்
ஏலக்காய் - 6
வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 3
கஸாகஸா - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பச்சை மிளகாய், கசகசா பேஸ்ட் செய்யவும்.
ஷாஜீரா, பட்டை, லவங்கம், ஏலக்காய் பொடிக்கவும்.
அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து தண்ணி வடித்து அரிசியை ஒரு ஸ்பூன் நெய்யில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் ஊற்றி மசாலா பௌடரை போடவும். பிறகு கட் செய்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் மசாலா பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
கட் செய்துள்ள காய்களை நன்கு வதக்கவும்.
பிறகு 3 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் உப்பு, லெமன் ஜுஸ் 1/2 மூடி சேர்த்து அரிசியை போட்டு மூடி ஒரு விசில் விட்டு ஆப் செய்யவும்.