வெஜ் பிரியாணி (1)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - கால்கிலோ

உறித்த பச்சைப்பட்டாணி - 50 கிராம்

கேரட் - 50 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

கோஸ் - 50 கிராம்

குடைமிளகாய் - 50 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பூண்டு - 8 பல்

மஞ்சத்தூள் - அரைடீஸ்பூன்

மிளகாத்தூள் - ஒருஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒருஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

நெய், வெண்ணெய் - 2+2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்துமல்லித்தழை - ஒரு சிறிய கட்டு

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி குறைந்தது அரை மணி நேரமாவது ஊறவைக்கவும்.

எல்லா காய்களையும் பொடிசாக அறிந்து கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, வெங்காயம் மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெய் போட்டு காய்களை மிருதுவாக வதக்கவும்.

வதங்கியதும்,மஞ்சப்பொடி,கரம் மசாலாப்பொடி,மிளகாத்தூள் போட்டு வதக்கவும்.அரைத்த விழுதைச்சேர்க்கவும்.

அதன்மேல் ஊறின அரிசியைச்சேர்த்து நன்கு கிளறவும்.

உப்பையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிடவும்.

ஆறினதும்,குக்கரைத்திறந்து பொடிசாக நறுக்கிய கொத்துமல்லி, நெய் போட்டு நன்கு கலக்கவும்.

சூடாகப்பரிமாறவும்

குறிப்புகள்: