வெஜ் சேமியா பிரியாணி
தேவையான பொருட்கள்:
சேமியா - அரை கிலோ
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - ஐந்து
எண்ணெய் - 100 கிராம்
டால்டா (அ) நெய் - மூன்று தேக்கரண்டி
இரண்டு அங்குலம் பட்டை - இரண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு
தயிர் - 50 மில்லி
மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 200 கிராம்
கேரட் - 150 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
பட்டாணி - 50 கிராம்
செய்முறை:
சேமியாவை சிவற கருகாமல் இரண்டு தேக்கரண்டி போட்டு வறுத்து ஆற வைக்கவும்.
சேமியாவை சிவக்க விடாமல் வறுத்து ஆற வைக்கவும். எல்லா காய்களையும் நறுக்கி தயாராக வைக்கவும்.
ஒரு வாயகன்ற பெரிய சட்டியை காயவைத்து அதில் எண்ணெய் + டால்டா (அ) நெய் கலவை ஊற்றி சூடு வந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காயை போட்டு தாளித்து விட்டு வெங்காயத்தை போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்.
பிறகு உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாகவும், கேரட்டை தடிமனான வட்ட வடிவமாகவும் நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து கொத்தமல்லி தழை, புதினா, பச்சை மிளகாய், தக்காளியை போட்டு வதக்கவும்.
பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி பட்டாணி, பீன்ஸ் சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.
பிறகு தயிரையும் சேர்த்து சிம்மில் விட வேண்டும். நல்ல கூட்டு புளிகாய்ச்சல் பதத்திற்கு வரவேண்டும். பிறகு சேமியா ஒரு டம்ளருக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவு. சேமியா எத்தனை டம்பளர் இருக்கோ அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கொதி வந்ததும் சேமியாவை போட்டு கிளறி தீய குறைத்து வைக்க வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து நன்கு கிளறி அப்படியே அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு சிறிது நேரம் அந்த சூட்டிலேயே விட்டு விடவேண்டும். சுவையான வெஜ் சேமியா பிரியாணி ரெடி.