வெஜிடபுள் பிரியாணி (2)
13 - Good!
3 நட்சத்திரங்கள் - 13 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 5
உருளைக்கிழங்கு - 2
காரட் - ஒன்று
பீன்ஸ் - 50 கிராம்
பச்சைபட்டாணி - ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
பட்டை - கொஞ்சம்
கிராம்பு - கொஞ்சம்
உப்பு - சிறிதளவு
தக்காளி - கால் கிலோ
செய்முறை:
அரிசியை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, தாளித்து வெங்காயம் இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், தக்காளி, பச்சைபட்டாணியை வேக வைத்து, இதனுடன் கரம்மசாலா போட்டு கிளறி தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பிறகு அரிசியை போட்டு வேக வைக்க வேண்டும். அரிசி பொல பொலவென்று வெந்தவுடன் இறக்கி, சிறிது நெய் ஊற்றிக் கிளறி சூடாக பரிமாறவும்.