வெஜிடபிள் பிரியாணி 2

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

கேரட் - 1

பீன்ஸ் -6

பச்சைப்பட்டாணி- 10

நூல்கோல் - 1/2

டர்னிப் - 1/2

காளிஃபிளவர் - 1/4

உருளைக்கிழங்கு - 2

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சம் பழம் - 1

தயிர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

முந்திரி - 6,

சின்ன வெங்காயம் - 7,

இஞ்சி - 1 அங்குல துண்டு,

பச்சை மிளகாய் - 8,

பட்டை - 1,

கிராம்பு - 2,

ஏலக்காய் - 2,

கொத்தமல்லி தழை - 1 கட்டு.

தாளிக்க:

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,

பூண்டு - 6,

புதினா - 1 கைப்பிடி,

கொத்தமல்லி - 1 கைப்பிடி,

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.

நெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை:

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

தண்ணீரை வடித்து, 1/2 தேக்கரண்டி நெய் விட்டு, 2 நிமிடம் வறுத்து எடுக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை (கொத்தமல்லி தவிர), மீதி நெய் விட்டு, வதக்கி, கொத்தமல்லியையும் சேர்த்து அரைத்து வைக்கவும். வெங்காயத்தையும் சன்னமாக நீளமாக நறுக்கி வைக்கவும்.

காய்களை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

தயிரை கடைந்து 1/4 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, மசாலாவில் ஊற்றவும்.

கொதிக்க ஆரம்பித்ததும், அரிசி, உப்பி சேர்த்து, கலக்கி, மூடி, வெயிட் போடவும்.

குறைந்த தணலில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். மூடியைத் திறந்து, எலுமிச்சம் பழசாறு, கொத்தமல்லி, புதினா சேர்த்து, கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: