வெஜிடபிள் பிரியாணி (5)

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதிஅரிசி - 2 கப்

பெரிய கேரட் - 1

உருளை - 2

பீன்ஸ் - 10 அல்லது 15

பட்டாணி - 1/4 கப்

மல்லித்தழை - சிறிது

புதினா - சிறிது

ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் - 3

தக்காளி - 3

சோயாசங்க் - 20 உருண்டைகள்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

தனியாத்தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - 2 1/4 குழிக்கரண்டி

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலம் - சிறிது

செய்முறை:

அரிசியை 1/2 மணிநேரம் ஊற விடவும்.

சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து, நீரை நன்கு பிழிந்து வைக்கவும்.

இந்த பிரியாணியின் ஸ்பெஷலே காய்கள் மிகப்பொடியாக இருப்பதுதான். அதனால் அனைத்து காய்களையும் பட்டாணி சைஸுக்கு நறுக்கிகொள்ளவும்.

பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.

நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, மல்லி, புதினா தழைகள சேர்க்கவும்.

அனைத்தும் வதங்கியதும், உப்பு, மசாலா பொடிகள், சோயாசங்க், காய்களை சேர்த்துக்கிளறவும்.

2 3/4கப் நீர் சேர்த்து ஊறிய அரிசியை சேர்த்து நெய் விட்டு கிளறி குக்கரை மூடி விடவும்.

2 விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும். மல்லி இலையை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: