வெஜிடபிள் பிரியாணி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீஸ், கேரட், பீன்ஸ் பொடியாக நறுக்கியது - 3/4 கப்

நெய் - 4 தேக்கரண்டி

பாசுமதி அரிசி - 1.5 கப்

சோம்பு - அரை தேக்கரண்டி

பட்டை, ஏலக்காய் - தலா 3

வெங்காயம் - 2

மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி

தக்காளி - 3

இஞ்சி,பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைத்து விடவும். நெய்யை காயவைத்து சோம்பு, பட்டை, ஏலம் போட்டு பொரிய விட்டு, பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

இளம் பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி, மல்லி இலை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் காய்கறிகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி ஒரு கப்புக்கு 1.5 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.

தேவைக்கு உப்பும் சேர்த்து கொதித்ததும் அரிசியை வடித்து தண்ணீர் போனதும் சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் சற்று தண்ணீர் உறிஞ்சியதும் குறைந்த தீயில் மூடியை இட்டு 30 நிமிடம் வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்

சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: