வெஜிடபிள் பிரியாணி செய்முறை
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
காரட் - 2
பீன்ஸ் -10
பச்சைப்பட்டாணி- 10
நூல்கோல் - 1/2
பீட்ரூட் - 1/2
காளிஃபிளவர் - 1/2
உருளைக்கிழங்கு - 2
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - 1
பிரெட் - 3 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 அங்குல துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 5
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி.
தாளிக்க:
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
பிரிஞ்சி இலை - சிறிது,
புதினா - 1 கைப்பிடி,
கொத்தமல்லி - 1 கைப்பிடி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
நெய் - 4 மேசைகரண்டி.
செய்முறை:
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த அரிசியை உதிராக வடித்து மஞ்சள் தூள், உப்பு 1 ஸ்பூன் நெய் கலந்து ஆற வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வைக்கவும்.
பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீளமாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
உருளைக்கிழங்கை முழுதாக வேக வைத்து தோல் நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
காய்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய காய்களை சிறிது உப்பு சேர்த்து, 1/2 டம்ளர் தண்னீரில் வேக வைக்கவும். காய் வேகவும் தண்ணீர் சுண்டவும் சரியாக இருக்கணும்.
பிரட்டை சிறு சதுரங்களாக நறுக்கி எண்ணெயில் பொரித்து வைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் எண்ணெய், பாதி நெய்யை விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வதக்கியபின், வேக வைத்த காய்கள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வதங்கியபின், ஆறவைத்த சாதம், வேக வைத்த உருளைக்கிழங்கு, எலுமிச்சம் பழசாறு சேர்த்து சாதம் உடையாமல் நன்கு கிளறி தம்மில் வைக்கவும்.
10 நிமிடம் கழித்து மீதி நெய், பொரித்த பிரட் துண்டுகள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.