வாணியம்பாடி பிரியாணி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 300 கிராம்

பாஸ்மதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1 பெரியது

புதினா, கொத்தமல்லி – 1 கை அளவு நறுக்கியது

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி

--------------------------------------

-- இஞ்சி பூண்டு விழுது அரைக்க --

--------------------------------------

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 6 பல் (தோல் நீக்கியது)

பட்டை – 1 சிறிய துண்டு

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

சோம்பு – 1 தே.கரண்டி

பச்சைமிளகாய் - 2

---------------------------------------------------

-- சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க --

-----------------------------------------------------

அரைத்த இஞ்சி பூண்டு விழுது - அனைத்தும்

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

தயிர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

---------------------------------------------------

-- முதலில் தாளிக்க : --

-----------------------------------------------------

எண்ணெய் , நெய் - சிறிதளவு

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை

செய்முறை:

வெங்காயத்தினை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதிற்கு தேவையான பொருட்கள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுது + சிக்கனில் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து சிக்கனுடன் கலந்து கொண்டு குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

அரிசியினை தண்ணீரில் போட்டி 15 – 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு, அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், ஊறவைத்துள்ள சிக்கன் கலவையினை இத்துடன் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.

2 - 3 நிமிடங்கள் கழித்து புதினா + கொத்தமல்லியினை சேர்த்து கிளறி, தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

இத்துடன் 4 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து சிறிய தீயில் வைத்து தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

பிரியாணி நன்றாக வெந்தவுடன், கடைசியில் எலுமிச்சை சாறினை பிழிந்து கிளறிவிடவும் . சுவையாக எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி.

குறிப்புகள்:

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 40 நிமிடங்கள்

இதில் தக்காளியினை சேர்க்க தேவையில்லை.

தண்ணீருக்கு பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்