ரிச் மொகல் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) - ஒன்றரை கப்
நெய்யில் வறுத்த முந்திரி - 10
தயிர் - கால் கப்
தனி மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா 2
அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை - தலா ஒன்று
குங்குமப்பூ - சிறிதளவு (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக்கொள்ளவும்).
எண்ணெய், நெய் - தேவையான அளவு
உப்பு, - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும்.
புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு, தக்காளி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காய்கறிகள், கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, தயிர் சேர்க்கவும். இதனுடன் உப்பு, மூன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறவும். நன்கு ஆவி வந்ததும், குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
பரிமாறும் முன் பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.