ராஜ்மா ஸ்பிரிங் ஆனியன் பிரியாணி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்

கறுப்பு ராஜ்மா - கால் கப்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்

பட்டை - சிறு துண்டு

ஏலக்காய் - ஒன்று

காய்ந்த மிளகாய் - 4

மிளகு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

எண்ணெய், நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறுப்பு ராஜ்மாவை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் வேகவைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும்.

பிறகு, வேகவைத்த ராஜ்மா, வெங்காயத்தாள், வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு குக்கரை மூடவும்.

ஆவி வந்ததும், `வெயிட்’ போட்டு அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: