மெட்ராஸ் மட்டன் பிரியாணி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1 கிலோ

அரிசி – 4 கப்

தயிர் – 1 கப்

எண்ணெய் – சிறிதளவு

நெய் – 2 மேஜை கரண்டி

-------------------------------------

அரைத்து கொள்ள

-------------------------------------

கசாகசா – 1 மேஜை கரண்டி

சின்ன வெங்காயம் – 10

இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்

பச்சைமிளகாய் – 4

கொத்தமல்லி – 1 கைபிடி அளவு

-------------------------------------

நறுக்கி கொள்ள :

-------------------------------------

வெங்காயம் – 2 பெரியது

தக்காளி – 3

புதினா – 1 கைபிடி அளவு

பச்சைமிளகாய் – 3 இரண்டாக அரிந்து கொள்ளவும்

-------------------------------------

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:

-------------------------------------

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

தனியா தூள் – 1 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

-------------------------------------

பொடித்து கொள்ள

-------------------------------------

பட்டை – 2

கிராம்பு – 3

ஏலக்காய் – 3

(குறிப்பு - இதற்கு பதில் கரம்மசாலா தூள் 1/2 தே.கரண்டி பயன்படுத்து கொள்ளலாம்.)

-------------------------------------

முதலில் தாளிக்க

-------------------------------------

எண்ணெய் – சிறிதளவு

பட்டை – 1

கிராம்பு – 3

ஏலக்காய் – 3

பிரியாணி இலை – 2

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும். பிரஸர் குகக்ரில் மட்டன் + மஞ்சள் தூள் + 1 தே.கரண்டி உப்பு + 1 கப் தண்ணீர் சேர்த்து 5 – 6 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொடித்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். கசாகாசாவினை சூடான தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து அதனை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

இத்துடன் சின்ன வெங்காயம் + பச்சைமிளகாய் + இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பிறகு இத்துடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரிசியினை சுமார் 10 – 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பிறகு அதனை தனியாக எடுத்து கொள்ளவும். பாத்திரத்தில் 1 மேஜைகரண்டி நெய் ஊற்றி அரிசியினை போட்டு 2 – 3 நிமிடங்கள் வதக்கி தனியாக தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் + 1 தே.கரண்டி நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

இத்துடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பிறகு, அரைத்த விழுது + பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு , தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி கரைந்த பிறகு, வேகவைத்த மட்டன் + மிளகாய் தூள் + தனியா தூள் + பொடித்த தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். ( மட்டன் வெந்த தண்ணீரினை தனியாக வைத்து கொள்ளவும்.)

அனைத்து நன்றாக கலந்த பிறகு, இத்துடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.( குறிப்பு : 1 கப் அரிசிக்கு சுமார் 2 கப் தண்ணீர் என்ற Ratioவில் வைத்து கொள்ளவும். மட்டன் வேகவைத்த தண்ணீரியையும் அளந்து சேர்த்து கொள்ளவும்.)

தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது வதக்கி வைத்துள்ள அரிசியினை சேர்த்து வேகவிடவும்.

சாதம் 80 – 90 % வெந்த பிறகு, அதன் மீது புதினா இலை சேர்த்து தட்டு போட்டு மூடி தம்மில் வைத்து வேகவிடவும்.

சுவையான மெட்ராஸ் மட்டன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்:

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்

இந்த பிரியாணியின், Main Specialயே சின்ன வெங்காயம் , கசாகசா சேர்த்து அரைப்பது தான்.

இதில் பச்சைமிளகாய் அதிகம் சேர்த்து அரைப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். (அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொள்ளவும்.

புதினாவினை கடைசியில் சேர்ப்பதினால் நல்லா மணமாக இருக்கும்.