முட்டை பிரியாணி (4)

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை – 6

பாஸ்மதி அரிசி – 2 கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி

தயிர் – 1/2 கப்

தேங்காய் பால் – 1 கப்

சிக்கன் ஸ்டாக் அல்லது காய்கறி ஸ்டாக் - 1 கப் விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.

----------------------

-- நறுக்கி கொள்ள --

----------------------

வெங்காயம் – 1 பெரியது

தக்காளி – 2

பச்சைமிளகாய் - 4

புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி

----------------------

-- சேர்க்க வேண்டிய தூள் வகைகள் : --

----------------------

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

கரம்மசாலா தூள் – 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

----------------------

-- முதலில் தாளிக்க ---

----------------------

எண்ணெய் + நெய் – 2 மேஜை கரண்டி

பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய் - தலா 1 அல்லது 2

செய்முறை:

முட்டையினை தண்ணீரில் போட்டு 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து அதில் இருந்து தோலினை நீக்கி தனியாக வைத்து கொள்ளவும். முட்டையினை 2 – 3 இடத்தில் கீறி கொள்ளவும்.

அரிசியினை தண்ணீரில் குறைந்தது 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

முட்டை வேகும் சமயம், வெங்காயம் + தக்காளியினை நீளமாக நறுக்கி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை சுத்தம் செய்து கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்

இத்துடன் வெங்காயம் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, இதில் பச்சைமிளகாய் + புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

இதில் தயிர் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து வேகவிடவும்.

இதில் முட்டையினை சேர்த்து மேலும் 2 – 3 வேகவிடவும். இதில் தேவையான அளவு தண்ணீர் + சிக்கன் ஸ்டாக் அல்லது காய்கறி ஸ்டாக் (Vegetable/Chicken Stock) சேர்த்து கொதிக்கவிடவும்.

பிரஸர் குகக்ரில் 1 தே.கரண்டி நெய் ஊற்றி அதில் அரிசியினை சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.

அதில் இந்த முட்டை கலவையினை ஊற்றி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.

சுவையான முட்டை பிரியாணி ரெடி.

குறிப்புகள்:

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 35 நிமிடங்கள்

பிரியாணி செய்து கடைசியில் 2 முட்டையினை சிறிது மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து , முட்டை பொடிமாஸ் (Scrambled Eggs ) மாதிரி செய்து பிரியாணியில் கிளறினால் சூப்பர்ப் சுவையுடன் இருக்கும்

இத்துடன் பச்சடி , சிப்ஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.