மீன் பிரியாணி (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2கப்

மீன் - 1/2 கிலோ

தேங்காய் பால் - 1 கப் (கெட்டியான தேங்காய்ப்பால்)

தண்ணீர் - 2 கப்

தயிர் - 3 மேசைக்கரண்டி

இஞ்சி - 2 மேசைக்கரண்டி

பூண்டு - 2 மேசைக்கரண்டி

கருவா - ஒரு துண்டு

ஏலம் - 4

கிராம்பு - 4

ரம்பை இலை -பாதி

கொத்தமல்லி இலை - சிறிய கட்டு

புதினா - சிறிது

கருவேப்பிலை - சிறிது

தக்காளி - 2 பெரியது

வெங்காயம் - 1 பெரியது

பச்சைமிளகாய் - 6

முந்திரி - 5

பாதாம் - 5

பிஸ்தா - 5

கசகசா - 2 மேசைக்கரண்டி

மசலாத்தூள் - 3 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாதாம், பிஸ்தா இரண்டையும் தோல் எடுத்து முந்திரி கசகசா உடன் சேர்த்து மை போல் அரைத்துக்கொள்ளவும்.

முதலில் மீனை சுத்தம் செய்து(மீன் முள் இல்லாததாக இருக்கவேண்டும்) அதில் 3 மேசைக்கரண்டி மசாலா தூள், ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தக்காளியை நீளவாக்கில் அரிந்து போடவும்.அத்துடன் 1 மேசைக்கரண்டி இஞ்சி,பூண்டு1 மேசைக்கரண்டி,தயிர் 1 மேசைக்கரண்டி,

கசகசா,பாதம்,முந்திரி,விழுது ,பச்சை மிளகாய் போட்டு வைக்கவும்.

பின்பு சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி வாசனை பொருள்களை போட்டு, இஞ்சி 2 மேசைக்கரண்டி, பூண்டு 2 மேசைக்கரண்டி, தயிர் 2 மேசைக்கரண்டி, ரம்பை இலை, கொத்த மல்லி இலை, புதினா, கருவேப்பிலை போட்டு வதக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு தக்காளி கலவயைப்போட்டு கிளறி, தேங்காய்ப்பால், தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

பின்பு அரிசியை கழுவிபோட்டு ரைஸ் குக்கருக்கு மாற்றி வேகவிடவும். ஒரு Pan ல் எண்ணெய் ஊற்றி மீனை பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.

சோறு வெந்ததும் மீனை போட்டு கிளறி தம்மில் போடவும். சிறிது முந்திரி, திராட்சை நெய்யில் பொரித்து போடவும்.

குறிப்புகள்: