மீன் பிரியாணி (5)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ

கொடுவா மீன் - ஒரு கிலோ

தேங்காய் - 4 கீரல்

தக்காளி - 300 கிராம்

வெங்காயம் - அரை கிலோ

இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி

கரம் மசாலாப்பொடி - ஒரு தேக்கரண்டி

மஞ்சள்பொடி - ஒரு தேக்கரண்டி

மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி

மல்லித் தழை - ஒரு பிடி

புதினா - ஒரு பிடி

எலுமிச்சை - ஒன்று

பான்டான் இலை - ஒன்று

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 5

ஏலம் - 4

தயிர் - 200 மில்லி

முந்திரி - 10

பசு நெய் - 50 கிராம்

புளி - சின்ன நெல்லிக்காய் அளவு

அஜினோமோட்டோ - 2 சிட்டிகை

கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை

சன்ஃப்ளவர் ஆயில் - அரை லிட்டர்

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

மீன் பொரிக்க:

மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி

மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளவர் மாவு - ஒரு மேசைக்கரண்டி

முட்டை - ஒன்று

உப்பு - தேவையன அளவு

கேசரி பவுடர்- ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து துண்டங்கள் போடவும். வெங்காயத்தை உரித்து நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

தேங்காயை நைசாக அரைக்கவும். தக்காளி, பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். முந்திரியை ஒடித்து வைக்கவும்.

பிறகு ஒரு வாயகன்ற கடாயில் எண்ணெய் அனைத்தயும் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அதில் மேலும் முந்திரியையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு மீனை நீர் இல்லாமல் வடிகட்டவும்.

அதில் மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, உப்பு, சோள மாவு, முட்டை அனைத்தயும் போட்டு நன்கு பிசறவும்.

வெங்காயம் பொரித்த எண்ணெயில் மீன் துண்டங்களை 2, 3 ஆக போட்டு முறுகாமல் பொரித்து எடுக்கவும்.

பிறகு அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலம் ஆகிவற்றை போட்டு வெடித்ததும் அதில் மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். மேலும் மிளகாய்பொடி, மஞ்சள்பொடி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி அதில் தயிர் சேர்க்கவும்.

மேலும் தேவையான உப்பு, சோடா உப்பு ஆகியவற்றைப் போட்டு மூடி வேக விடவும்.

சிறிது நேரத்தில் (சோடாப்பு சேர்ப்பதால்) வெங்காயம், தக்காளி கரைந்து விடும் அதில் மேலும் புளியை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.

மேலும் தக்காளி சாஸ், எலுமிச்சைச்சாறு, கரம் மசாலா, அரைத்த தேங்காய் விழுது அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.

பிறகு ஒரு கிலோ அரிசி வேகுமளவு உள்ள பாத்திரத்தில் 3/4 பாகம் நீர்விட்டு அதில் பான்டான் இலையை 3 துண்டாக வெட்டி போட்டு கொதிக்க விடவும்.

அதில் தேவையான உப்பு சேர்க்கவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் போது அரிசியை கழுவி தண்ணீரை வடிக்கட்டி அதில் போடவும். அரிசி 80% வெந்தவுடன் வடிகட்டவும்.

பிறகு அதே பாத்திரத்தில் தயார் செய்து வைத்துள்ள குழம்பை 2 கரண்டி பரவினாற்போல் விடவும், மேலும் வடித்த சோற்றை அதில் கொட்டி பரப்பி விடவும்.

மேலும் கேசரி பவுடரை சோற்றில் போட்டு அகப்பையால் கிளறவும், மேலும் 3 பெரிய கரண்டி குழம்பை பரவினாற்போல் விடவும்.

இத்துடன் பொரித்து வைத்துள்ள மீனை அதன் மேல் பரவினாற்போல் போடவும். மேலும் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை அதன் மேல் போடவும்.

மேலும் வறுத்த முந்திரி தூவி அதன் மேல் மீதமுள்ள குழம்பை பரவினாற்போல் ஊற்றவும் அதன் மேல் மல்லி புதினா தூவவும்.

கடைசியாக பசு நெய்யை பரவினாற்போல் ஊற்றி மூடி அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து பாத்திரத்தை ஏற்றி மேலே ஏதாவது கணம் வைக்கவும். சுமார் 20 நிமிடங்கள் புழுங்கவிடலாம்.

குறிப்புகள்: