மினி கணவாய் பிரியாணி
தேவையான பொருட்கள்:
கணவாய் மீன் - கால் கிலோ
பாஸ்மதி அரிசி - 600 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
மல்லி தழை - சிறிது
பட்டை, கிராம்பு, ஏலம், டவுன்டா இலை - தலா 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைகரண்டி
தயிர் - ஒரு கப்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - கால் கப்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய், நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 1/2 தேக்கரண்டி
செய்முறை:
கணவாயை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொண்டு, ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம், டவுன்டா இலை, வெங்காயம் போட்டு பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி, பச்சை மிளகாய், மல்லி தழை மற்றும் எல்லா தூள் வகைகளையும் சேர்க்கவும். கணவாய், தயிர், தேங்காய்ப் பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 விசில் வரை வேக விடவும்.
பின் அரிசியை களைந்து குருமாவில் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு வெயிட் போடாமல் மூடி வைக்கவும்.
ஆவி வந்ததும் 15 நிமிடம் சிம்மில் வேகவிட்டு இறக்கவும். சுவையான மினி கணவாய் பிரியாணி தயார்.