மஷ்ரூம் பிரியாணி (2)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி - 1 கப்
மஷ்ரூம் - 10
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 அங்குலத்துண்டு
கிராம்பு - 2
ஏலம் - 2
மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மல்லி, புதினா - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். காளானை இரண்டிரண்டாக நறுக்கிகொள்ளவும்.
பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம் தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி சேர்த்துக் கிளறவும். மசிந்து வரும் பொழுது ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் சேர்க்கவும்.
புதினா, மல்லி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்துக் கிளறி விடவும். நறுக்கிய காளான், தயிர் சேர்க்கவும்.
அரிசியை சுத்தம் செய்து சேர்க்கவும். ஒரு நிமிடம் அரிசியை வதக்கி விட்டு இரண்டு கப் நீர் சேர்க்கவும்.
இறுதியில் நெய் விட்டு கலக்கி, குக்கரை மூடவும்.
இரண்டு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மேலும் 3 நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.