மஷ்ரூம் தம் பிரியாணி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காளான் - 1 பாக்கெட்

பச்சை பட்டாணி - 1 கப்

சோயா(மீல்மேக்கர்) - 10

பாசுமதி அரிசி - 3 கப்

வெங்காயம் - 3

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

புதினா - 1 கப்

கொத்தமல்லி - 1 கப்

தயிர் - 3 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

பட்டை, சோம்பு, லவங்கம், கிராம்பு, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை - தாளிப்பதற்கு

காலா ஜீரா - 1/2 தேக்கரண்டி

நெய் - 100 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

சோள மாவு - 1/2 கப்

ஆரஞ்சு கலர் (அ) குங்கும பூ - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காளானை நான்காக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.

நீளமாக நறுக்கிய வெங்காயத்தில் ஒரு பாதியை எடுத்து சோள மாவில் பிரட்டி எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி காளான், பட்டாணி மற்றும் ஊறவைத்து பிழிந்த சோயாவை சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி உப்பு மற்றும் எல்லா தூளையும் சேர்க்கவும்.

நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினாவில் பாதி சேர்த்து 2 நிமிடம் வதக்கி தயிர் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.

இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவிட்டு அரிசிக்கு தகுந்த உப்பு, சிறிது காலா ஜீரா எலுமிச்சை சாறு சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து 80 சதவீதம் வேகவைத்து வடிக்கட்டி ஆறவிடவும்.

குக்கரில் அடி பகுதியில் வதக்கிய மசாலா கலவையின் ஒரு பகுதியை நிரப்பி பாதி பிறகு மீதமுள்ள கொத்தமல்லி புதினா மற்றும் பதி பொறித்த வெங்காயம் தூவவும்.

பகுதி சாதத்தை மேல நிரப்பவும். இதே போல் மீதமுள்ளதையும் அடுக்கி மேல ஆரஞ்சு கலர் அல்லது குங்கும பூ கரைத்து ஊற்றவும்.

10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி ரைதாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: