மல்டி காய்கறி பிரியாணி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்

வெங்காயம் - 2

தக்காளி - 4

கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று

பீன்ஸ் - 8

காலிஃப்ளவர் - சிறிதளவு

புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

தேங்காய்ப்பால், தயிர் - தலா கால் கப்

காய்ந்த மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப)

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 8 பல்

ஏலக்காய், லவங்கம் - தலா ஒன்று

முந்திரி - 12

சின்ன வெங்காயம் - 4 (தோல் உரிக்கவும்)

பிரிஞ்சி இலை - ஒன்று

எண்ணெய், நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும்.

தக்காளியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலையை சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா விழுது, தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் சேர்த்துக் கிளறவும்.

இதனுடன் தயிர், புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி... தேங்காய்ப்பால், 3 கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியைப் போட்டு, ஆவி வந்ததும் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். உருளைக்கிழங்கு குருமாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: