மட்டன் பிரியாணி (12)

on on on off off 5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி (அ) சீரகசம்பா அரிசி - ஒரு கிலோ

மட்டன் - ஒரு கிலோ

வெங்காயம் - 350 கிராம்

தக்காளி - 350 கிராம்

இஞ்சி - 100 கிராம் ( அரைத்து வைக்கவும் )

பூண்டு - 100 கிராம் ( அரைத்து வைக்கவும் )

தேங்காய்ப்பால் - ஒரு கப்

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி

தயிர் - அரை கப்

புதினா, கொத்தமல்லி - தலா ஒரு கட்டு

எலுமிச்சை - ஒன்று

கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி

தாளிக்க :

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 5 (அ) 6

செய்முறை:

குக்கரில் மட்டன், தயிர், கரம் மசாலா தூள், தலா ஒரு பட்டை, லவங்கம், ஏலக்காய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து மட்டன் முக்கால் பதம் வேகும் அளவிற்கு வேக வைத்து எடுக்கவும்.

மட்டன் வேக வைத்த தண்ணீரை தனியாக வடித்து எடுத்து, அதில் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு மிளகாய்த் தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தனியாக அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து லேசாக வதக்கவும்.

வதக்கியவற்றுடன் தேங்காய்ப் பால் கலந்த மட்டன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி தக்காளி கரைய வேக விடவும்.

தக்காளி கரைய வெந்ததும் மட்டனை சேர்த்து வேக விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் உலை நீர் வைத்து அதில் கேசரி பவுடர், புதினா, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து. கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மேலும் 5 நிமிடம் வேக விட்டு தண்ணீரை வடித்து சாதத்தை எடுத்துக் கொள்ளவும்.

மசாலாவுடன் சேர்ந்து மட்டன் வெந்ததும் வேக வைத்த சாதத்தை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.

பிரியாணி வைத்திருக்கும் பாத்திரத்தை மூடி வடித்த கஞ்சி நீர் பாத்திரத்தை மேலே வைத்து, சிம்மில் 15 நிமிடங்கள் தம்மில் போடவும்.

பிரியாணி வெந்ததும் இறக்கி வேக வைத்த முட்டை மற்றும் தக்காளி பச்சடியுடன் பரிமாறவும். சுவையான மட்டன் பிரியாணி தயார்.

குறிப்புகள்: