மட்டன் பிரியாணி (9)

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 4 டம்ளர்(1/2 கிலோ),

மட்டன் - 1/2 கிலோ,

பெரிய வெங்காயம் - 1,

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,

தக்காளி - 1,

இஞ்சி - ஒரு துண்டு,

பூண்டு - ஒரு முழு பூண்டு,

பச்சை மிளகாய் - 10,

கசகசா - 2 மேசைக்கரண்டி,

சோம்பு - 1/2 தேக்கரண்டி,

தனியாதூள் - ஒன்றரை மேசைக்கரண்டி,

நறுக்கிய புதினா - 1 கைப்பிடி,

நறுக்கிய கொத்தமல்லி - 1 கைப்பிடி,

தேங்காய் - 1(பெரிதாக),

பட்டை - சிறிது,

கிராம்பு - 4,

ஏலக்காய் - 4,

கேசரி கலர் - 1/2 தேக்கரண்டி,

எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி,

நெய் - 3 மேசைக்கரண்டி,

தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.

சோம்பு, கசகசா, இஞ்சி, தனியாதூள் சேர்த்து தனியாக அரைத்து, அதனுடன் சிறிது உப்பு, சேர்த்து மட்டனுடன் கலந்து வேக வைத்து வைக்கவும்.

தேங்காயைத் துருவி 8 டம்ளர் அளவு பால் எடுத்து வைக்கவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கியபின், அரிசியை சேர்த்து வதக்கி இறக்கவும்.

பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

முதலில் அரைத்து வைத்த வெங்காய விழுது சேர்த்துவதக்கவும்.

நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கி கரைந்ததும், தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடவும்.

தேங்காய்ப்பால் கொதிக்கும் போது வறுத்த அரிசியைப் போடவும்.

அரிசி பாதி வெந்ததும் உப்பு, எலுமிச்சம் பழ சாறு, கேசரிகலர், வேக வைத்த மட்டன் சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து தம்மில் அரை மணி வைத்து இறக்கவும்.

குறிப்புகள்: