மட்டன் பிரியாணி (7)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 3 கப்
மட்டன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி பெரியது - 2
தயிர் - 3 மேசைக்கரண்டி
இஞ்சி - 3 மேசைக்கரண்டி
பூண்டு - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
பாதம் - 5
பிஸ்தா - 5
முந்திரி - 3
நெய் - 75 மில்லி
தேங்காய் பால் - 2 கப்
ரம்பை இலை - பாதி
கொத்தமல்லி இலை - சிறிய கட்டு
புதினா - சிறிய கட்டு
கருவேப்பிலை - சிறிது
கருவாப்பட்டை - 2 துண்டு
ஏலம் - 3
கிராம்பு - 4
கசகசா -2 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் வெங்கயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும்.
பாதம், பிஸ்தா இரண்டையும் தோலை நீக்கி விட்டு கசகசா,முந்திரி சேர்த்து சிறிது தேங்காய்ப்பால் உடன் அரைத்துக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும்.
கறியை சுத்தம் செய்து அதில் 1 1/2 மேசைக்கரண்டி தயிர். 1 1/2மேசைக்கரண்டி இஞ்சி, 1 1/2 மேசைக்கரண்டி பூண்டு, வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய், பாதாம், பிஸ்தா விழுது, சிறிது கொ.மல்லி, புதினா, ரம்பை இலை போட்டு பிரட்டி வைக்கவும்.
அரிசியை கழுவி 3 மணி நேரத்துக்கு முன்பாக ஊறவைக்கவும்
ஒரு அடி கனமான பாத்திரத்தில் 75 மில்லி நெய் ஊற்றி இஞ்சி, பூண்டு தாளித்து தயிர், ரம்பை இலை, கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலை போட்டு, பின் கருவா, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து கறி கலவையை போட்டு கிளறி மிதமான தீயில் வேகவிடவும்.
சிறிது நேரம் கழித்து 2 கப் தேங்காய்ப்பாலில் 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும் அரிசியை போட்டு கிளறி ரைஸ் குக்கருக்கு மாற்றி வேகவிடவும்.
பிரியாணி வெந்ததும் பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி சிறிது முந்திரி, திராட்சை நெய்யில் பொரித்துப் போடவும்