மட்டன் பிரியாணி (5)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ

பாசுமதி அரிசி - 3 ஆழாக்கு

பெரிய வெங்காயம் - 5

தக்காளி - 5

பச்சை மிளகாய் - 10

புதினா - அரை கட்டு

கொத்தமல்லி - அரை கட்டு

பூண்டு - 50 கிராம்

இஞ்சி - 25 கிராம்

சோம்பு - 2 தேக்கரண்டி

பட்டை - 2

கிராம்பு - 2

அன்னாசி மொக்கு - 3

இலை - சிறிது

தயிர் - ஒரு கப்

ஏலக்காய் - 5

நெய் - 50 கிராம்

எண்ணெய் - 100 மி.லி

தேங்காய்ப்பால் - 2 கப்

மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி

மல்லிப்பொடி - அரை தேக்கரண்டி

முந்திரி - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி

செய்முறை:

பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவற்றை தூளக்கவும். இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். 6 பச்சைமிளகாய், பாதி புதினா, பாதி மல்லித்தழை, ஒரு வெங்காயம் சேர்த்து அரைக்கவும். அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு தூளக்கியவற்றையும், இலை, அன்னாசி மொக்கு, முந்திரி போட்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை கிளறவும்.

அதனுடன் நறுக்கின தக்காளி, கீறிய பச்சைமிளகாய், மீதி புதினா, மல்லித்தழை, போட்டு வதக்கி கறியும், தயிரும் சேர்த்து கிளறவும்.

பின் அரைத்தவற்றை சேர்த்து வதக்கி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி உப்பு போட்டு 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். 3 விசில் 10 நிமிடம் சிறு தீயில் வைக்கவும்.

பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து தேங்காய் பாலுடன் மேலும் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் அரிசியை கழுவிப்போட்டு தேவையெனில் உப்பு சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடவும்.

ஒரு விசில் 5 நிமிடம் சிறுதீயில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து, தேவையெனில் எலுமிச்சைச்சாறு விட்டு கிளறி பரிமாறலாம்.

குறிப்புகள்: