மட்டன் சப்ஜி பிரியாணி
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு படி (எட்டு டம்ளர்)
மட்டன் - அரை கிலோ
உருளை - கால் கிலோ
கேரட் - கால் கிலோ
பட்டாணி - 100 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
வெங்காயம் - 700 கிராம்
தக்காளி - 700 கிராம்
தயிர் - 300 கிராம்
இஞ்சி - 200 கிராம்
பூண்டு - 125 கிராம்
பச்சை மிளகாய் - 15
மிளகாய் தூள் - ஐந்து தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - இரண்டு கட்டு
புதினா - ஒரு கட்டு
சாஃப்ரான் - இரண்டு பின்ச் (பாலில் ஊற வைக்கவும்)
பட்டை - இரண்டு அங்குல துண்டு (நான்கு)
ஏலம் - நான்கு
கிராம்பு - எட்டு
எண்ணெய் - 200 கிராம்
டால்டா - 200 கிராம்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
இஞ்சி பூண்டை தனித்தனியாக அரைத்து வைக்கவும்.
அரிசியை (நல்ல தரமான பிரியாணி அரிசி) இரு முறை களைந்து ஊற வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும், தக்காளியை நான்கு துண்டுகளாக போடவும்.
கேரட்டை வட்ட வடிவமாக சிறிது தடிமனாக நறுக்கவும்.
பெரிய பிரியாணி சட்டியை காய வைத்து அதில் எண்ணெய் + டால்டா கலவையை ஊற்றவும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் பூண்டு மட்டும் போட்டு வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கி, இஞ்சி விழுதை போடவும்.
நல்ல வதங்கி பொன்னிறமானதும். மட்டன், கேரட், உருளையை போட்டு வதக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து, தக்காளி, மற்ற காய்கள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போடவும். பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
தயிரை நல்ல அடித்து ஊற்றி நல்ல கிளறி விட்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து மூடி போட்டு சிம்மில் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும்.
வெந்ததும் எண்ணெய் முழுவதும் மேலே வந்து விடும். இதே கூட்டோடுதான் இருக்கும்.
அப்படியே அரிசி ஒரு பங்குக்கு ஒன்னேகால் வீதம் பத்து டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை களைந்து போட்டு பாதி கொதி வந்ததும் தீயை சிம்மில் வைத்து பாலில் ஊறிய குங்குமப்பூவை ஊற்றி தம் போட வேண்டும் இருபது நிமிடம் கழித்து இறக்கி கிளறி பரிமாறவும்.