ப்ரான் பிரியாணி
தேவையான பொருட்கள்:
ப்ரான் – 20 - 25 (சுமார் 1/4 கிலோ)
இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
அரிசி – 2 கப்
தயிர் – 1 கப்
எண்ணெய் – சிறிதளவு
நெய் – 1 மேஜைகரண்டி
---------------------------------------------------------
வெட்டி கொள்ள வேண்டிய பொருட்கள் :
---------------------------------------------------------
வெங்காயம் – 1
தக்காளி – 2
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
பச்சைமிளகாய் – 2
-------------------------------------------------
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
-------------------------------------------------
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
-------------------------------------------------
அரிசி வேகவைக்கும் பொழுது சேர்க்க வேண்டியை
-------------------------------------------------
நெய் – 1 மேஜை கரண்டி
பட்டை- 1
கிராம்பு – 2
ஏலக்காய்- 2 .
பிரியாணி இலை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இறாலினை சுத்தம் செய்து அத்துடன் 1/4 கப் தயிர் + 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது + மஞ்சள் தூள்+ 1/2 தே.கரண்டி மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்
வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். அரிசியினை சுமார் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி இறாலினை போட்டு முக்கால் பாகம் வேகும் வரை வதக்கவும். ( கவனிக்க: அகலமான கடாயில் செய்தால் நல்லது. அகலம் குறைவாக இருந்தால் இறாலில் இருந்து தண்ணீர் நிறைய வந்து சுவை மாறிவிடும்.)
2 – 3 நிமிடங்களில் இறால் வெந்துவிடும். அதனை தனியாக தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்
அதே கடாயில் வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது + தக்காளி & பச்சைமிளகாய் + தயிர் + சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் + புதினா, கொத்தமல்லி என ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக் கொதிக்க ஆரம்பித்தவுடன், அரிசி வேகவைக்க கொடுத்துள்ள பொருட்கள் + ஊறவைத்த அரிசியினை சேர்த்து 90% வேகவைத்து கொண்டு சாதத்தினை தண்ணீர் இல்லாமல் வடிகட்டியினால் வடித்து கொள்ளவும்.
க்ரேவியில் இறாலினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.
இதன் மீது 90% வேகவைத்து வடித்து வைத்துள்ள சாதத்தினை பரவிட்டு தட்டு போட்டு மூடி சிறிய தீயில் 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும். தட்டினை உடனே திறக்காமல், 10 நிமிடங்கள் கழித்து திறந்து, பிரியாணியை கிளறிவிடவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி. இதனை க்ரேவி, தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
****கவனிக்க:
இறாலினை நிறைய நேரம் வேகவிடவேண்டாம். முதலிலேயே வதக்கி கொள்வது நல்லது.
குறிப்புகள்:
சமைக்க தேவைப்படும் நேரம்: 30 – 40 நிமிடங்கள்
பிரியாணிக்கு சிறிய இறாலினை விட பெரிய இறால் தான் நன்றக இருக்கும்.